"God is in Our Land"

இந்தியாவைப் பற்றிய உண்மைகள்

இந்தியாவைப் பற்றிய உண்மைகள்:

 

இன்றைய இந்தியா படைத்துள்ள சாதனைகள் அனைத்துமே ஒருதலைப்பட்சமானவை; உலக அமைதிக்கான இந்தியாவின் பங்கும், இந்தியாவின் தனித்துவமும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்தியர்கள் அவர்களுடைய உண்மையான இயல்புக்கு, ஆற்றலுக்கு உரிய இடத்தைத் தர தவறிவிட்டனர். இந்தியாவின் இன்றைய தலைமுறைக்கு தங்களைத் தவிர, தங்களுடைய தொன்மையான தனித்துவத்தைத் தவிர-வானத்தின் கீழ் உள்ள மற்ற அனைத்து விஷயங்களும் போதிக்கப்படுகின்றன. நான் பல்வேறு ஆதாரங்கள் மூலமாக (ஏறக்குறைய அவையனைத்துமே வெளிநாட்டவர்கள் மூலம் ஆய்ந்து சொல்லப்பட்டவை) திரட்டிய இந்தியாவைப் பற்றிய குறிப்புகளின் தொகுப்பை இங்கே கொடுத்திருக்கிறேன். இத்தகவலைத் தந்த ஊடகங்களுக்கு எனது நன்றி.

ஆத்ம தேடலில் ஈடுபட்டுள்ளவர்கள், உலகியல் சார்ந்த முன்னேற்றங்களில் பின்தங்கி இருப்பர் என்று தவறாக நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்காகவே இந்த உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

உலக வரலாற்றில் பண்டைய இந்தியாவைப் பற்றி கொடுக்கப்பட்டுள்ள உண்மைகள்

கீழ்க்காணும் தகவல்கள், 2006ல் வெளியிடப்பட்ட ஒரு ஜெர்மானிய பத்திரிகையில் கொடுக்கப்பட்டுள்ளன.

 • இந்தியா நாம் உபயோகிக்கும் எண்களைக் கண்டுபிடித்தது.
  •  இருப்பு சார்ந்த எண்களின் மதிப்பு (Place value System) தசம அமைப்பு (Decimal System) இந்தியாவில் 100 BCயில் தோற்றுவிக்கப்பட்டன.
  • பூஜ்ஜியம் ஆர்யபட்டரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆர்யபட்டர் 476 BC) தான் முதன்முலாக கோளவடிவிலான வான சாஸ்திரத்தை ஆய்வு செய்தவர். கிரகங்களின் இருப்பு நிலைகளையும், கிரகணப் புள்ளிகளையும், பூமியின் சுற்றளவையும் கணக்கிட்டவர்; ஹீலியோ சென்ட்ரிக் தேற்றத்தை கோபர்நிக்கஸீக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பாகவே சொல்லியவர்.
 • உலகின் முதல் பல்பலைக்கழகம் தக்-ஷசீலத்தில் 700 BCல் நிறுவப்பட்டது.
  • 10500க்கும் மேற்பட்ட மாணவர்கள், உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்து, 60க்கும் மேற்பட்ட துறைகளில் இங்கு தேர்ச்சி பெற்றார்கள்.
 •  4ம் நூற்றாண்டு CEல் கட்டப்பட்ட நாலந்தா பல்கலைக்கழகம், பண்டைய இந்தியா, கல்வித்துறையில் படைத்த ஒரு மிகச்சிறந்த சாதனையாகும்.
 •  இந்தியாவின் சமஸ்கிருத மொழி, ஐரோப்பாவின் அனைத்து மொழிகளுக்குமான தாயாகும்.
  • கணினி மென்பொருள் தயாரிப்புக்கான மிகப்பொருத்தமான மொழி சமஸ்கிருதம். (ஜீலை 1987ல் ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் வெளியான அறிக்கையின் படி)
 • மனிதர்கள் அறிந்து வைத்துள்ள மருத்துவ முறைகளிலேயே மிகவும் தொன்மையானது ஆயுர்வேதம்.
  • மருத்துவத்தின் தந்தை எனக் கூறப்படும் சரகர் 2500 ஆண்டுகளுக்கு முன் ஆயுர்வேதத்தை தொகுத்து அளித்தவர்.
  • தற்போது, ஆயுர்வேதம் தனக்குரிய இடத்தை நமது நாகரிகத்தில்வேகமாக பெற்று வருகிறது.
 • தற்போதைய இந்தியாவின் பிம்பங்கள் ஏழ்மையையும், முன்னேற்றமின்மையையும் காட்டினாலும், பிரிட்டிஷாரின் ஆக்கிரமிப்புக்கு, அதாவது17ம் நூற்றாண்டுக்கு முன்புவரை, உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடாக, பொருளாதாரத்தில் முதன்மை பெற்ற நாடாக இந்தியா விளங்கியது.
  •  கிறிஸ்டோபர் கொலம்பஸ், இந்தியாவின்மேல் கவனம் செலுத்தியது அதனுடைய பொருளாதார செல்வங்கள் பொருட்டே ஆகும்.
 • நீர் வழியாக இடம்பெயர்தல் என்னும் முறை உருவானது சிந்துநதியில்தான். இது ஆரம்பித்தது 6000 வருடங்களுக்கு முன்பாக. புலன் பெயர்தலுக்கான ஆங்கில வார்த்தையான NAVIGATION என்னும் சொல் அதற்கான சமஸ்கிருத சொல்லான நவ்கதி என்னும் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். ஆங்கிலச் சொல்லான NAVY என்பதும் சமஸ்கிருத சொல்லான நவ் என்பதிலிருந்து தோன்றியதுதான். (புலன் பெயர்தலை அறிந்திருந்தாலும் இந்தியர்கள் பிற அண்டை நாடுகளை ஆக்கிரமிப்பு செய்வதிலோ, பிற கலாச்சாரங்களை சீரழிப்பதிலோ ஈடுபடவில்லை)
 • வானவியல் விஞ்ஞானி ஸ்மார்ட்க்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே பாஸ்கராச்சாரியர், பூமி சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலத்தை துல்லியமாகக் கணக்கிட்டு கூறினார்.
  • 5ம் நூற்றாண்டில் கூறப்பட்ட கணக்கின்படி, பூமி சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் 365.258756484 நாட்களாகும்.
 • பை (π) யின் மதிப்பு முதன்முதலில் கணக்கிடப்பட்டது புத்தாயனா என்பவரால்.
  • பிதாகரஸ் தேற்றம் என்று கூறப்படும் பொருளின் கருத்தை அவர் விளக்கியுள்ளார்.
  • ஐரோப்பிய கணிதவியல் மேதைகளுக்கு முன்பாகவே, ஆறாம் நூற்றாண்டிலேயே அவர் இதைக் கண்டுபிடித்துள்ளார்.
 • அல்ஜீப்ரா, டிரிக்னாமெட்ரி, கேல்குலஸ் – இவையனைத்தும் உலகுக்கு கிடைத்தது இந்தியாவில் இருந்துதான் (ஆங்கில வார்த்தை களான Geometry மற்றும் Trignometry ஆகியவை சமஸ்கிருத சொற்களான ஜியோமிதி மற்றும் திரிகோணமிதி என்பவைகளிலிருந்து பெறப்பட்டவை.)
 • கிரேக்கர்களும், ரோமானியர்களும் உபயோகித்த மிகப்பெரிய எண் ”106” ஆகும். ஆனால் இந்துக்கள், வேத காலத்திலே (5000 BCE) குறிப்பான தனிப்பட்ட பெயர்களுடன் 10 to the power of 53 என்னும் அளவுக்கு பெரிய எண்களை உபயோகித்து வந்துள்ளார்கள்.
 • அறிவியல் வளர்ந்துள்ளதாக கூறப்படும் இந்நாளில் கூட, நடைமுறையில் உபயோகப்படுத்தப்படும் மிகப்பெரிய எண் டேரா (10 to the power of 12 ) என்பதாகும்.
 • 11ம் நூற்றாண்டிலேயே, ஸ்ரீதராச்சார்யரால் இருபடிச் சமன்பாடு (Quadratic Equation) சொல்லப்பட்டுள்ளது.
 • அமெரிக்காவில் உள்ள மதிப்புமிக்க கற்களை ஆய்வு செய்யும் நிறுவனத்தின் (Gemological Institute of America) கூற்றுப்படி, 1896ம் ஆண்டுவரை உலகத்தில் வைரங்களுக்கான ஆதாரமாக இருந்தது இந்தியா மட்டுமே.
 • பாசனங்களுக்காக கட்டப்பட்ட உலகிலேயே மிகவும் தொன்மையான நீர்பிடிப்புப் பகுதி மற்றும் அணை இருப்பது இந்தியாவின் சௌராஷ்டிரத்தில் சதுரங்க விளையாட்டு (Chess) தோன்றியது இந்தியாவில். அது இந்தியாவில் அஷ்டபாதா மற்றும் ஷடரஞ்சா என்று அழைக்கப்பட்டது.
 • இந்தியாவின் சுஷ்ருதர், அறுவை சிகிச்சைத் துறையின் தந்தையாவார்.
  •  2600 ஆண்டுகளுக்கு முன்பாகவே, அவரும் அவருடைய மருத்துவ விஞ்ஞானிகளும் சிக்கலான அறுவை சிகிச்சைகளான கருப்பை மேற்திறப்பு, கண் அறுவை, செயற்கை உறுப்புகள் பொருத்துதல், எலும்பு உடைவுக்கான சிகிச்சை, சிறுநீரக கற்களை  கற்றுதல், மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சைகளான ஒட்டுறுப்பு அறுவை (Plastic Surgery), மூளை அறுவை (Brain Surgery) முதலியவற்றை செய்துள்ளார்கள்.
  • அநஸ்திசியா (மயக்கம் தரும் மருந்து) வின் பயன்பாடு பண்டைய இந்தியாவில் நன்கு அறியப்பட்டுள்ளது.
  • அவர்களால் 125க்கும் மேலான அறுவை சிகிச்சை உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • உடற்கூறியல் (Anatomy), சரீர சாஸ்திரம் (Physiology)> நோய்களின் மூலம் பற்றிய ஆய்வு (Etiology)> கருவியல் ஆய்வு (Embryology), ஜீரணசக்தி, வளர்சிதைமாற்றம்; (Metabolism), மரபணுக்கள் ;(Genetics)> நோய்யெதிர்ப்புத் தன்மை முதலியவை குறித்த அவர்களுடைய ஆழமான அறிவு பல ஏடுகளில் பதியப் பெற்றுள்ளது.
 • பெரும்பான்மையான மனித சமூகம் காடுகள் நாடோடி வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த போது, 5000 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியர்கள் சிந்து சமவெளியில் ஹரப்பா நாகரிகத்தைப் பெற்றிருந்தார்கள்.

இந்தியாவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய பிற உண்மைகள்:

 • யோகமுறைகள் இந்தியாவில் தோன்றி 5000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
 • தற்காப்புக் கலைகள் முதலில் இந்தியாவில் தோற்றம் பெற்று பின்னர் புத்தமதத் துறவிகளால் ஆசியாவின் பிற பகுதிகளில் பரப்பப்பட்டன.
 • வாரணாசி அல்லது காசி அழைக்கப்படும் பட்டிணம் புத்தர் 500 BCயில் அங்கு சென்றபோது, “தொன்மையான நகரம்”என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுவே, உலகிலேயே மிகவும் தொன்மையான, ஆனால் தொடர்ந்து மக்களால் வசித்துவரப்படும் நகரமாகும்.
 • தமிழகத்தில் தோன்றிய பரதநாட்டியம்தான் உலகிலேயே ஆவணப்படுத்தப்பட்ட நடனங்களில் மிகவும் பழமையானது. இது1500BCக்கு முந்தைய காலத்திலிருந்தே புழக்கத்தில் உள்ளது.
 • 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே, இந்தியா விவசாயிகள் கரும்பு மற்றும் இன்னபிற பயிர்கள் அடையாளம் கண்டு பயிரிட்டு வந்திருக்கிறார்கள். இந்திய மக்கள் 500BC காலகட்டத்தில் சர்க்கரை கட்டிகளை உருவாக்கும் முறையை கண்டுபிடித்தனர். அவர்களுடைய உள்ளுர் மொழியில், இந்த கட்டிகளை ‘கண்டா’என்று அழைக்கப்பட்டன. ஆங்கிலத்தின் ‘Candy’எனும் சொல்லுக்கு இதுவே மூலச் சொல்லாகும்.
 • பண்டைய இந்தியர்கள் வேதியியலில் சிறந்த அறிவு பெற்றிருந்தனர். வர்ணக் கலவைகள், வாசனைத் திரவியங்கள், பஸ்மங்கள் (மருத்துவத் தேவைகளுக்காக) அவர்களால் தரமான முறையில் தயாரிக்கப்பட்டன.
 • ராஜா சந்திர வர்மாவால் டில்லியில் நிறுவப்பட்ட இரும்புத்தூண் துருப்பிடிக்காமல் 1500 ஆண்டுகளாக உள்ளது. உலோகங்களில் செய்யப்பட்ட இத்தகைய வேதியியல் வேலைப்பாடுகள், ஸ்டைன்லஸ் ஸ்டீல் கண்டுபிடிக்கப்படும்வரை, மேற்கத்தியவர்களுக்குத் தெரியாமலேயே இருந்தது.
 • 6ஆம் நூற்றாண்டு BCயைச் சேர்ந்த கனடா, பரமணு (atom) மூலக்கூறுகளை (Molecules) உருவாக்குகிறது என்று ஆய்ந்து கூறினார். மேலும் மூலக்கூறுகளின் (Molecules) அடர்த்தி இடத்துக்கு, பொருளுக்கு ஏற்றார்போல் மாறுகிறது என்பதையும் கண்டுபிடித்தார். எனவே ஒரு பொருள், காற்றில் இருக்கும்போது இருப்பதைவிட, நீரில் எடை குறைந்து காணப்படுகிறது என்று கண்டுபிடித்தார். இவர் இந்த விஷயங்களைக் கூறியது ஆர்கிமிடிசுக்கும் முன்னால்.
 • இந்தியாவின் பிரம்மகுப்தர் (628AD) எந்த முழு எண்ணையும் பூஜ்ஜியத்தால் வகுத்தால் கிடைப்பது எண்ணிலி (Infinity) என்று வரையறுத்துக் கூறினார்.
 • முதன்முதலில் ஒரு மொழிக்கான இலக்கண வரைமுறைகளைத் தொகுத்தவர் இந்தியாவின் பாணினி (6ஆம் நூற்றாண்டு BC) ஆவார்.

இந்தியாவின் பங்களிப்பு குறித்த கூற்றுகள்:

“எண்கள் மூலம் எண்ணுவதைக் கற்றுக் கொடுத்த இந்தியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். அது தெரியாமல் இருந்திருந்தால், எந்த ஒரு உபயோகமான அறிவியல் கண்டுபிடிப்பும் சாத்தியமாகியிருக்காது.”
-ஆல்பர்ட் எய்ன்ஸ்டின்

“இந்தியா மனித இனத்தின் தொட்டிலாகும். மனித மொழிகளின் பிறப்பிடமாகும். வரலாற்றின் தாயாகும். இதிகாசங்களின் பாட்டியாகும். பாரம்பரியத்தின் கொள்ளுப்பாட்டியாகும். மனித வரலாற்றில் நமக்கு மிகவும் மதிப்புமிக்க, மிகவும் பொருள் பொதிந்த விஷயங்கள் தோண்டி எடுக்கப்பட்டது இந்தியாவில்தான்.”
-மார்க்ட்வைன்

“ஒரு சிப்பாயைக்கூட தன் எல்லையைத் தாண்டி அனுப்பும் அவசியம் இல்லாமலேயே இந்தியா, சீனாவை, கலாச்சார ரீதியாக கடந்த 20 நூற்றாண்டுகளாக கைப்பற்றி அதிகாரம் செலுத்தியுள்ளது.”
-ஹீஷூ, அமெரிக்காவுக்கான முன்னாளைய சீனப்பிரதிநிதி

“இந்தியா வேதங்களின் தேசம். இந்த குறிப்பிடத்தக்க வேதங்கள், பூரணமான வாழ்க்கைக்கு தேவைப்படும் சமயரீதியான கருத்துக்களை மட்டும் கொண்டிருக்கவில்லை. அவை, அறிவியலால் உண்மை என்று நிரூபிக்கப்பட்ட உண்மைகளையும் தங்களுக்குள் பெற்றிருக்கின்றன. மின்சாரம், கதிர்இயக்கம், மின்னணுவியல், ஆகாய விமானங்கள் இவையனைத்தும் வேதத்தை ஓதிய ஞானிகளுக்கு தெரிந்திருக்கின்றன”.
-வீலர் வில் காக்ஸ்

“சமஸ்கிருத மொழி, அது எவ்வளவுதான் தொன்மையான தாய் இருந்தாலும், வியப்புக்குரிய ஒரு கட்டமைப்பைப் பெற்றுள்ளது: அது கிரேக்க மொழியைவிடவும் முழுமையானது: இலத்தீன் மொழியை விடவும் பிரமாண்டமானது: இவ்விரண்டு மொழிகளைவிடவும் அழகானது மற்றும் பரிசுத்தமானது.”
-சர் வில்லியம் ஜோன்ஸ் (பிரிட்டிஷ் நாட்டவரான கீழ்த்திசை மொழிப்புலமையாளர், 1746-1794)

“பண்டைய இந்தியா மருத்துவர்களின் அறுவை சிகிச்சை முறை துணிச்சலானது, நேர்த்தியானது. அவர்கள் அறுவை சிகிச்சைத் துறையில் ரைனோபிளாஸ்டி (Rhinoplasty – மூக்கு, காது முதலிய உறுப்புகளில் செய்யப்படும் அறுவை சிகிச்சை)-க்கென ஒரு கிளையையே வைத்திருந்தார்கள். இதைத்தான், ஐரோப்பிய அறுவை சிகிச்சையாளர்கள் தற்போது உள் ஆய்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.”
-சர் W.ஹண்டர் (பிரிட்டிஷ் அறுவை சிகிச்சை நிபுணர், 1718-1783)

“ஐரோப்பாவில் நிகழ்த்தப்பட்டவையாகக் கருதப்படும் பெரும் பாலான அறிவியல் முன்னேற்றங்கள், உண்மையில் இந்தியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவை.”
-கிராண்ட்டஃப் (பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர்)

“இந்திய நகரங்கள் சுபீட்சத்துடன் பரந்து விரிந்திருக்கிருக்கின்றன. பயனிகளுக்காக நிறைய தங்கும் விடுதியில் இருக்கின்றன. ஏழைகளுக்கு இலவசமாகவே மருத்துவ சேவை புரியும் மருத்துவமனைகள் உள்ளன. இங்கு விஹாரங்களும், கோயில்களும் பிரம்மிக்கத்தக்கபடி உள்ளன. மக்கள் அவர்களுடைய தொழில்களைத் தேர்ந்தெடுப்பதில் சுதந்திரம் பெற்றுள்ளனர். மக்களுடைய போக்குவரத்துகளில் எந்தத் தடைகளும் இல்லை. அரசு ஊழியர்களும், சிப்பாய்களும் சீராக ஊழியம் வழங்கப்படுகிறார்கள். மக்கள் மதுவுக்கு அடிமைப்படவில்லை. அவர்கள் வன்முறையை ஒதுக்குகிறார்கள். குப்த மன்னர்களால் வழங்கப்படும் மேலாண்மை சிறப்பானதாகவும், பாரபட்சமற்றதாகவும் உள்ளது.”
-சீன யாத்திரிகர் ஃபா-ஹியான் (இரண்டாம் சந்திரகுப்த மௌரியரின் ஆட்சியின்போது கூறியது, 399AD -414AD)

“பொதுவாக இந்தியர்கள் படிப்பதிலும், எழுதுவதிலும், கணிதத்திலும் ஐரோப்பிய நாடுகளின் சாதாரண மக்களைவிட உயர்வான தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.”
-வாரன் ஹேஸ்டிங்ஸ்

“இந்தியாவின் மகத்தான நூல்களில், ஒரு பேரரசு பேசியிருக்கிறது – சிறிய விஷயங்களைப் பற்றியோ, முக்கியத்துவம் இல்லாத விஷயங்களைப் பற்றியோ அல்ல. அது பேசியிருப்பது வேறு ஒரு காலகட்டத்திலும், சூழ்நிலையிலும் சிந்திக்கப்பட்ட, நம்மை தற்போது ஆட்கொண்டிருக்கும் கேள்விகளைத் தீர்த்து வைக்கின்ற, மிகப்பெரிய, தெய்வீகமான, நிரந்தரமான, முதிர்ச்சியான ஒரு அறிவினுடைய குரலில்.”
-ஆர். என். எமர்சன் (அமெரிக்க கட்டுரையாளர், 1803 -1882)

இந்தியா அதனுடைய சமயம் சார்ந்த கொள்கைகளில் மிகவும் தொன்மை வாய்ந்தது, வலுவானது என்று நம் அனைவருக்கும் தெரியும். இந்தியா அதனுடைய சமயம் சார்ந்த விஷயங்களில் வலிமையாக இருந்த காலகட்டங்களில் எல்லாம் அதே அளவுக்கு வாழ்க்கையின் மற்றைய அம்சங்களிலும் (அதாவது, பொறியியல் துறை, கணிதம், வானவியல், மருத்துவயியல், வேதியியல், இலக்கியம், மேலாண்மை, வணிகம் முதலியவை) வலுவான நிலையில் இருந்திருக்கிறது. நாம் நமது ஆன்மீகம் சார்ந்த வலிமைக்கு உரிய மரியாதையையும், அதற்குரிய இடத்தையும் கொடுத்தோமேயானால், மற்ற தரமான வாழ்வியல் முன்னேற்றங்கள், நிழல் போல்தானே தொடரும்.

உலகம் முழுதும் பயணித்த ஆங்கில வரலாற்றாய்வாளரும். செய்தி தொடர்பாளருமான மைக்கேல் வுட் (1948ல் பிறந்தவர்) தன்னுடைய ‘The story of India’என்னும் நூலில் ‘இந்த உலகில் பாரம்பரிய கலாச்சாரம் உயிரோடு இருக்கும் ஒரே இடம் தமிழ்நாடு ஆகும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு காரணம் தங்களுடைய தொன்மையான நம்பிக்கைகள், கலாசாரம், இசை, இலக்கியங்கள் இன்னபிற கலைகள் குறித்த முக்கிய குறிப்புகளை தமிழர்கள் நவீன உலகமய மாக்குதல்களுக்கும் இடையே பாதுகாத்து வந்துள்ளதுதான். ஆனால் இங்கு நாம் கவனிக்கவேண்டியது, அவர் உபயோகித்திருக்கும் வார்த்தை “உயிரோடு’ என்பதாகும்: ‘வளமாக இருக்கும் இடம்’ என்று அவர் குறிப்பிடவில்லை.

உலகத்தில் தொன்மையும், மதிப்பும் மிக்க நமது கலாச்சாரம் ஏதோ ஒரு பகுதியில் ‘உயிரோடு’ இருப்பதால், இந்த தேசத்திற்கு பெருமை இல்லை. மனித நேயத்தையும், ஆத்ம விசாரத்தையும், அறிவு வளத்தையும் கொண்டிருக்கும் நமது நாகரீகம், அதன் உண்மையான பரிமானத்தில் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் செழித்து வளர வேண்டும். நம் பாரம்பரியத்தை நாம் பேணிக்காக்க வேண்டும். இதன் பொருள் புதுமையை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பது அல்ல. உதாரணத்துக்கு புதிய வகையான உடைகளை அணியலாம். ஆனால் அவை, காண்பவரை கூசிக் குறுகச்செய்யும்படி இருக்கக்கூடாது. இதையே நான் நமது பாரம்பரியம் என்று குறிப்பிடுகிறேன்.

புதுமைகள் சுற்றுப்புறத்தையும், மன நலனையும் சீர்குலைக்காத பட்சத்தில் நாம் அவற்றை ஏற்றுக் கொள்ளலாம். இது இந்தியாவுக்கு மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த உலகத்துக்கும் நன்மை பயப்பதாய் அமையும்.