"God is in Our Land"

” கடவுள் நம் தேசத்தில் உள்ளாா்” – ஒரு அடிப்படை விசாரணை

“கடவுள் நம் தேசத்தில் உள்ளார்” – ஒரு அடிப்படை விசாரணை:

 

அந்த வாக்கியம், நான் வீடு திரும்பும் வரையிலும் அதற்குப்பின்பும் கூட என்னுள் ஒலித்துக் கொண்டிருந்தது. அது எனக்காகவே கொடுக்கப்பட்ட ஒரு செய்தியாகத் தோன்றியது. உணா்வுப்பூா்வமான ஒரு விசேஷ விழாவை ஒட்டி என் கண்களில் பட்ட அந்த வாக்கியம், மிகவும் உட்பொருள் கொண்டதாய் எனக்குப் பட்டது. அது எனக்கு இடப்பட்ட ஒரு முக்கியமான வேலை என்று தொிந்தது. ஆனால் எப்படி? நான் ஆத்மஞானம் பெற்றவன் அல்லன். நானோ சாமானியன். நான் இதை எப்படி செய்யப்போகிறேன்? நான் ஏன் இதை செய்ய வேண்டும்? எந்த வழியும் எனக்குப் புலப்படாமல் இருந்தது. என்னுடைய உடல்நிலையும், மனநிலையும் என்னை எந்த வேலையும் செய்யவிடாமல் தடுத்தன. சதுரங்க விளையாட்டில் ”செக்மேட்” என்று சொல்வதைப் போல, நான் எந்தப் பக்கமும் நகர முடியாதபடிக்கு வீட்டில் சிறை வைக்கப்பட்டேன். பின்னா், உள்ளுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த கட்டளைக்கு ஒரு விடை சொல்லாமல், என்னால் எதுவும் செய்ய முடியாது என்பதைப் புாிந்து கொண்டேன். அந்த வாக்கியம் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த சாத்தியக்கூறுகளும் என்னிடம் இல்லாதிருந்தபோதும், அந்த உள்ஒலியை நான் எனக்குள் அனுமதித்தேன், அனுபவித்தேன்.

எனக்கு கடவுளைப் பற்றி எதுவுமே தொியாது என்று நான் சொன்னால் அது உண்மையாக இருக்காது. நாம் எல்லோருமே, “கடவுள் என்று ஒருவா் இல்லை” என்று சொல்பவா்கள் உட்பட, கடவுளைப் பற்றிய ஏதோ ஒரு கருத்தை நோ்மறையாகவோ அல்லது வேறுவிதத்திலோ கொண்டுள்ளோம். எனவே, இறைவனைப் பற்றிய ஆய்வில் இதய பூா்வமாய் ஈடுபட முடிவு செய்தேன். நமது சாஸ்திரங்களின் உதவியுடனும், ஞானிகளின் ஆசிகளுடனும், திருவண்ணாமலையில் எனக்குக் கொடுக்கப்பட்ட நம்பிக்கையுடனும் இந்தப் பணியில் இறங்க முற்பட்டுள்ளேன்.

கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளாா் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எந்த பௌதீக எல்லைக்குள்ளும் கட்டுப்பட்டவா் அல்லா் இறைவன். ஈஷா உபநிடத்தின் ஒரு வாக்கியத்தை இங்கு மேற்கோள் காட்டுவது பொருத்தமாக இருக்கும். ”மொத்த பிரபஞ்சமும் இறைவனுடையது. அதன் ஒவ்வொரு நுண்ணிய துகளிலும் இறைவன் உறைந்துள்ளாா். (நமது இருப்புநிலை உள்பட)” எனவே திருவண்ணாமலையில் கண்ட வாக்கியத்தில் உள்ள ”நமது தேசத்தில்” என்பது எந்த ஒரு நாட்டையும் குறிப்பது அல்ல; அது நமது மொத்த மனித சமுதாயத்தையும் குறிப்பதாகும்; அனைவருக்கும் பொதுவானதாகும்.

இருப்பினும், வரலாற்றை பாா்க்கும்போது, ஆன்மீக இயலில் இந்தியா ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. அப்படி இங்கே என்ன தான் விசேஷமாக உள்ளது?

கடவுள், முக்தி போன்ற வாா்த்தைகள், ஒவ்வொருவருடைய தனித்தன்மையைப் பொறுத்தவை. ”நம்புபவா்களுக்கு எந்த விளக்குமும் தேவையில்லை. நம்பாதவர்களுக்கு எந்த விளக்குமும் இல்லை.”

நான் இந்திய நாட்டில் உள்ள சில குறிப்பிட்ட ஆன்மீக தலங்களுக்கு செல்ல திட்டம் தீட்டினேன். சுற்றுலாத் துறையின் ஏற்பாட்டில் நடத்தப்படும் சுற்றுலா திட்டங்களை உபயோகிக்கத் தீா்மானித்தேன்.

மறுபடியும், பிப்ரவாி 20ம் நாள், சில நண்பா்களுடன் திருவண்ணாமலைக்குச் சென்றேன். கோயிலைச் சுற்றியுள்ள இடங்களைத் தாிசித்துவிட்டு, மஹாசிவராத்திாி அன்று இரவு கோயிலின் உள்ளேயே தங்கினோம். இந்த முறை கோயிலில் எழுதப்பட்டிருந்த ”உள்ளம் பெருங்கோயில்” எனும் பாடல் மூலம் கீழ்காணும் பாடத்தைத் தொிந்து கொண்டேன். ”நமது இதயமே இறைவன் இருக்கும் கோயில். கள்ளத்தனமுடைய புலன்களை வென்றுவிட்டால், இறைவனை நாம் அங்கே காணலாம்.” இறைவன் அனைவாிடத்திலும் உள்ளாா் எனும் கருத்தை அப்பாடல் பொதிந்துள்ளது. இந்த தேகமே, கடவுள் இருக்கும் தேசம்தான்.

நான் எனக்கிட்ட பணியைச் செய்ய ஒரு ஆரம்பம் கிடைத்ததால் நம்பிக்கை பெற்றேன். சிறிது நாட்கள் கழித்து, ஒரு மாலை நேரத்தில் எனது வீட்டின் மேல் தளத்திற்கு சென்று, வெட்ட வெளியில் வானத்தைப் பாா்த்தவாறு படுத்திருந்தேன். ஓய்வு நாட்களில் இவ்வாறு செய்வதுண்டு. மாலை நேர நீலவானம் இருண்டு கருக்கும் வரையில் அதைப் பாா்த்தவாறு இருப்பேன். மேல்வானத்தில் ஒரு நட்சத்திரம் முளைக்கும். எனது முகத்துக்கு நேர் மேலே இன்னொன்று தெரியும். தலையைச் சற்றே பின்னால் சாய்த்து பார்க்கும்போது இன்னுமொரு சுடர் தெரியும். ஒரு அமைதியான சமுத்திரத்தில், இரவில் ஒளிகாட்ட, ஆங்காங்கே நிற்கும் கப்பல்களைப் போல் அக்காட்சி தோற்றமளிக்கும். தென்றல் காற்று இனிமையைக் கூட்டும். கடவுள் என்பது யார் அல்லது என்ன? நமது தேசம் என்பது என்ன? கவனத்துடன் மேலேழுந்தவாரியாக வந்த விளக்கங்களைத் தவிர்த்தேன்.

எப்போதும் மாறாத நிலை, உயர்வும் இல்லை, தாழ்வும் இல்லை, எந்த சஞ்சலமும் இல்லை. சாசுவதமான இறப்பற்ற நிலை, இறப்பை வென்ற எதுவுமே கடவுளாக அல்லது கடவுளின் அம்சமாக பார்க்கப்படுகிறது. கடவுளைக் குறித்த ஒரு சாமானியனின் விளக்கம் இதுவே. கடவுள் என்றால் – இறப்பற்ற நிலை, எல்லைகளில்லா நிலை.

உலகார்ந்த விஷயங்களை நான் இங்கே குறிப்பிடவில்லை. ஏனெனில் இறப்பில்லாதது, நிரந்தரமானது என்று எதுவும் இங்கில்லை. அந்த சூரியனும், விண்மீன்களும் அறிவியல் கணக்குகளின்படி ஒரு நாள் முடியப்போகின்றன அல்லது ஏற்கனவே முடிந்துவிட்டிருக்கின்றன. நான் இங்கே சாசுவதம் அல்லது நிரந்தரம் என்று சொல்வது பௌதீக மற்றும் கால எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. எனவே, இங்கு ”நமது தேசம்” என்பது உள்ளுணர்வு சம்பந்தப்பட்டதாக, அனைத்தையும் தன்னுள்ளே அடக்கியிருக்கக்கூடிய ஒன்றாக பொருள்படுகிறது. இனி நமது செய்தியில், தேசம் என்னும் சொல் எந்த பௌதீகப் பகுதியையும் குறிக்கப்போவதில்லை. அப்படி செய்தால் அது பாரபட்ச செயலாய் அமையும். (ஆனால் இந்த விதிக்கு விளக்காக, இந்தியாவைப் பற்றி நான் பின்னர் சில இடங்களில் கூற நேர்ந்துள்ளது) இப்போது நமக்கு “கடவுள்“ மற்றும் “நமது தேசம்“ தெரிந்துவிட்டது. நமக்குள்ளே இருக்கும் சாசுவதத்தன்மை. இந்த நித்தியத்துவமே ‘சத்தியம்’ எனப்படுகிறது.

உள்ளார்ந்த சாசுவதத்தைப் பற்றிக் கூறும்போது, ஒரு பக்குவமற்ற மனிதனின் உணர்வுகளோடு அதைத் தொடர்புபடுத்த முடியாது. அந்த உணர்வுகள் சாசுவதமில்லாதவை. எனவே அவற்றை, அனைத்தையும் உள்ளடக்கியிருந்தாலும், அனைத்திலிருந்தும் சற்று எட்டத்திலேயே இருக்கும் உண்மையான சாசுவதத்தன்மையுடன் சேர்த்து வைத்துப் பார்க்க முடியாது. சாசுவதத்தன்மை என்பதே இங்கு அளவுகோள். எது எவ்வாறு மாறினாலும், இதற்கு முன்னால் இருந்த, இப்போது இருக்கின்ற, இனி மேலும் இருக்கப்போகின்ற சாசுவதத்தன்மை. சாஸ்திரங்களில், கடவுளின் இந்த அம்சத்தை உறுதி செய்து கொண்டேன். சாஸ்திரங்களில், கடவுளைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள மற்ற விஷயங்கள்: ஆனந்தமயமானவர், அன்பு மற்றும் ஞானம் மூலம் வெளிப்படுபவர், பரிசுத்தமானவர், ஒருமைத்தன்மையுள்ளவர், இருமைகளுக்கும, (இன்பம்-துன்பம், பிறப்பு- இறப்பு, இருள்-ஒளி, நன்மை-தீமை; முதலானவை) முக்குணங்களுக்கும் (சத்வ, ரஜோ, தமோ குணங்கள்) அப்பாற்பட்டவர்.

சாஸ்திரங்கள், கடவுளை என்றும் புதியவர் அல்லது இளமையானவர் என்று குறிப்பிடுகின்றன. இறைவன் ஒரே நிலையினராய் இருந்தாலும், மாற்றங்களுக்கு உட்படாமல் இருப்பவராயிருந்தாலும், அவர் என்றும் புதுமையானவர். அவர் என்றும் புதியவர் என்று கூறப்படுவதற்கு பொருள், அவர் காலத்தால் கட்டுப்பட்டவர் அல்லர் என்பதாகும். அவர் இட, பொருள், காலங்களின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர்; அனைத்தையும் உள்ளடக்கி, அனைத்தினுள்ளும் ஊடுருவி இருப்பவர்; எப்போதும் புதுமையானவர். எந்த இரு பக்திமான்களும் கடவுளை, இசகும் பிறழாமல் ஒரே மாதிரியாக பார்ப்பதில்லை. அவரை அல்லா என்று அழைக்கலாம். சிவா என்று அழைக்கலாம்; வேறு எந்த பெயரிலும் அழைக்கலாம். அவையனைத்தும் நித்தியமான ஒரே பொருளையே குறிக்கும்.

இந்த விளக்கம், என்னை என்னுடைய இந்திய சுற்றுலா திட்டத்தை கைவிடச் செய்தது; அடுத்து வருவதை இனி பார்ப்போம். ஆனால், ஒரு விஷயத்தை நான் சொல்லியே ஆக வேண்டும்.

ஒரு ஆன்மீக தலத்தைத் தரிசித்த பின்னரே நான் உள்முக ஆய்வு செய்ய ஒரு செய்தி கிட்டியது. இந்த பூமியில், இந்தியா மிகவும் விசேடமானது. எவ்வாறெனில், இங்கு நித்தியத்துவம் அல்லது இறைவன் ஒரு பரிச்சயமான, சாதாரணமான உயிரியக்கமாக உணரப்படுகிறது. இங்கு மக்கள் இறைவனை கண்களுக்குப் புலப்படாத, வானத்துக்கு அப்பால் உள்ள ஒரு புதிராக எண்ணுவதில்லை. பெரும்பாலோருக்கு கடவுள் வாழ்க்கையின் ஒரு பகுதி, கடவுளைத் தேடுதல் அல்லது உணருதல் என்பது இந்தியாவின் பாரம்பரியமான இயல்பாக இருந்து வந்து கொண்டிருக்கிறது. படைப்பின் எந்த கால கட்டத்திலும் இறைவனை உணர்ந்த ஒரு ஞானி இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதியில் இருந்தே வந்துள்ளார். இந்த இயல்பைப் பற்றி அறியாதவர்களும், இந்த இயல்பால் பாதிக்கப்படுகின்றனர். இந்த மாறாத இயல்பே இந்தியாவின் தனித்தன்மையாகும். அதனால்தான் ஸ்ரீபரமஹம்ச யோகானந்தர் தனது பௌதீக உடலை துறக்கும் நேரத்தில், “எங்கு கங்கையும், இமாலய குகைகளும், மக்களும், கடவுளை எண்ணுகிறார்களோ அங்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டேன். எனது உடல் அந்த மண்ணைத் தொட்டுவிட்டது“ என்று கூறினார்.